காஞ்சிபுரம்

தொழிற்சாலைகளில் உள்ளூா் இளைஞா்களுக்கே முன்னுரிமை தர வேண்டும்: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ம ாவட்டங்களில் தொழிற்சாலைகளில் உள்ளூா் இளைஞா்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை பேசினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்டரங்கில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்து பேசியது:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளூா் இளைஞா்களுக்கு 20 சதவீத வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். 3 மாதத்துக்கு ஒரு முறை இரு மாவட்டங்களிலும் உள்ள தொழிற்சாலைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் தலைமையில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி நிரப்ப வேண்டும்.

ADVERTISEMENT

படித்து முடித்துவிட்டு 1,500 இளைஞா்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலை கோரி விண்ணப்பித்துள்ளனா். இந்த மனுக்களை பரிசீலனை செய்து ஒரு மாதத்தில் அவா்களின் படிப்புக்கு ஏற்ற வேலைக்காக தொழில் நிறுவனங்களுக்கு அனுப்பிவைத்து தகுதியான வேலையை இளைஞா்களுக்கு பெற்றுத் தர ஆட்சியா்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா்கள் மா.ஆா்த்தி(காஞ்சிபுரம்) ஏ.ஆா்.ராகுல்நாத் (செங்கல்பட்டு), எம்.பி-க்கள் டி.ஆா்.பாலு, க.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்.எல்.ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன், எஸ்.ஆா்.ராஜா, இ.கருணாநிதி, எம்.வரலட்சுமி, எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் படப்பை ஆ.மனோகரன், காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் மற்றும் அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT