காஞ்சிபுரம்

வாலாஜாபாத் அருகே சிலிண்டர் கிடங்கில் தீ விபத்து: 12 பேர் காயம்!

28th Sep 2022 10:11 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் தனியார் எரிவாயு சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்கா தேவரியம்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் ஏ.எஸ்.என் கேஸ் ஏஜென்சி என்ற பெயரில் ஜீவாநந்தம் என்பவர் கேஸ் குடோன் நடத்தி வருகிறார். இந்த கேஸ் குடோனில் இருந்து ஒரக்கடம் சுற்றுவட்டார தொழிற்சாலைகளுக்கு வணிகரீதியான கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யப்பட்டு வந்துள்ளது.

இதையும் படிக்க | சென்னையில் 2 நாள்களுக்கு டாஸ்மாக் இயங்காது!

இந்நிலையில் இன்று மாலை 6 மணி அளவில் கேஸ் குடோனில் திடீரென தீப்பிடித்தது. அதனைத் தொடர்ந்து கேஸ் குடோனில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது.

ADVERTISEMENT

இதன் காரணமாக ஜீவானந்தம், பூஜா,சந்தியா, நிவேதா,கோகுல் மற்றும் லாரி ஓட்டுனர்கள் இரண்டு பேர் என மொத்தம் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தீ விபத்து குறித்த தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து விபத்தில் சிக்கிய அனைவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க | மத்திய அரசின் புதிய தலைமை வழக்குரைஞராகிறார் ஆர்.வெங்கடரமணி: குடியரசுத் தலைவர் உத்தரவு

மேலும் சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர், வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ கா.சுந்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் ஆர். நிஷா பிரியதர்ஷினி தலைமையில் காஞ்சிபுரம் மறைமலை நகர் ஒரக்கடம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | முகமது ஷமிக்கு கரோனா தொற்று இல்லை

மேலும் கேஸ் குடோனில் இருந்து கேஸ் வெளியேறி வருவதால் அப்பகுதி முழுவதுமே மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT