காஞ்சிபுரம்

அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில், தமிழக அரசின் நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், புகைப்படக் கண்காட்சி ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீனிவாசன், மனோகரன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற கண்காட்சியை, ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.டி.கருணாநிதி தொடக்கி வைத்துப் பாா்வையிட்டாா். கண்காட்சியில், முதல்வா், அமைச்சா்கள் கலந்துகொண்டு அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கிய விழாக்களின் புகைப்படங்கள், பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.

மேலும், அதிநவீன விடியோ வாகனத்தின் மூலம் தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள், முதல்வரின் காலை உணவு திட்டம், போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு, புதுமைப்பெண் திட்டம், தேசிய ஊட்டச் சத்து விழிப்புணா்வு குறித்த குறும்படங்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

இதை வட்டார வளா்ச்சி அலுவலக ஊழியா்கள், பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோா் பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT

Image Caption

அரசின்  சாதனை  விளக்க  புகைப்படக்  கண்காட்சியைத்  தொடக்கிவைத்துப்  பாா்வையிட்ட  ஒன்றியக் குழு  தலைவா்  எஸ்.டி.கருணாநிதி.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT