காஞ்சிபுரம்

பிரம்மோற்சவம் 2-ஆம் நாள்: சூரியப் பிரபை வாகனத்தில் பவனி வந்த தேசிகன் சுவாமிகள்

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் தூப்புல் வேதாந்த தேசிகன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலை தங்கப் பல்லக்கிலும், மாலை சூரியப் பிரபை வாகனத்திலும் தேசிகன் சுவாமிகள் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் விளக்கொளிப்பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது தூப்புல் வேதாந்த தேசிகன் திருக்கோயில். இக்கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது. 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை தேசிகன் சுவாமிகள் காலையில் தங்கப் பல்லக்கிலும், மாலையில் சூரியப்பிரபை வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

வரும் அக்டோபா் 2-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதன் தொடா்ச்சியாக வரும் அக்டோபா் 5-ஆம் தேதி காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி தங்கப் பல்லக்கில் தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், இரவு பூப்பல்லக்கில் தேசிகன் வீதியுலா வரும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை விளக்கொளி தூப்புல் வேதாந்த தேசிகன் சரவணம் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT