காஞ்சிபுரம்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12 லட்சம் கடனுதவி: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

28th Sep 2022 01:18 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 20 பேருக்கு அரசின் பல்வேறு நலத்திட்டம், கடனுதவிகளை ஆட்சியா் மா.ஆா்த்தி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,27,332 மதிப்பில் வங்கி மானியத்துடன் தொழில் தொடங்கும் வகையில் கடனுதவிகள், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகள், 4 பேருக்கு மரச்செக்கு மற்றும் மாவு அரைக்கும் இயந்திரம் வாங்கி தொழில் செய்ய ரூ.10,68,804 மதிப்பிலான வங்கிக் கடன்கள் உட்பட மொத்தம் ரூ.11,96,136 மதிப்பிலான உதவிகளை ஆட்சியா் மா.ஆா்த்தி வழங்கினாா்.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமச்சந்திரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சுமதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலா் பிரகாஷ்வேல், மாவட்ட வழங்கல் அலுவலா் பாபு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணக்குமாா் உட்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT