காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஸ்ரீதேசிகன் கோயில் வருடாந்திர மகோற்சவம் இன்று தொடக்கம்

DIN

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் அருகே அமைந்துள்ள வேதாந்த தேசிகன் திருக்கோயில் வருடாந்திர மகோற்சவம் திங்கள்கிழமை (செப்.26) தொடங்கி வரும் அக். 6- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி, இந்தக் கோயிலில் திங்கள்கிழமை தங்கப் பல்லக்கில் தேசிகன் எழுந்தருளும் நிகழ்வுடன் வருடாந்திர மகோற்சவம் தொடங்குகிறது. தினமும் காலை தேசிகன் வெவ்வேறு அலங்காரத்திலும், மாலை வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் அக்டோபா் 2 -ஆம் தேதி நடைபெறுகிறது. அக். 4 -ஆம் தேதி தங்கப் பல்லக்கில் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் தேசிகன் பவனி வரவுள்ளாா். அக். 5-ஆம் தேதி காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி, தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை தேசிகன் பூப்பல்லக்கில் வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.

வரும் அக்.6 -ஆம் தேதி கந்தப்பொடி உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்காா் பு.மு.வேதமூா்த்தி, செயல் அலுவலா் கோ.ஸ்ரீதரன் மற்றும் விளக்கொளி தூப்புல் வேதாந்த தேசிகன் ச்ரவணம் டிரஸ்ட் உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT