காஞ்சிபுரம்

‘பாட்டில்களில் பெட்ரோல் விற்கக் கூடாது’

26th Sep 2022 11:41 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் பெட்ரோல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியா்களிடம் பாட்டில்களில் பெட்ரோல் விற்பனை செய்யக் கூடாது என போலீஸாா் திங்கள்கிழமை அறிவுரை வழங்கினா்.

காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் உத்தரவின் பேரில், சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் விநாயகம், சாா்பு ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் காவல் துறையினா் நகரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிறுவனங்களுக்கு நேரில் சென்று அங்கு பணியாற்றும் பணியாளா்களிடம் பாட்டில்களில் பெட்ரோல் விற்பனை செய்யக் கூடாது என்றனா்.

அங்கு வந்திருந்த வாகன ஓட்டிகளிடமும் பாட்டில்களில் பெட்ரோல் வாங்கக் கூடாது என அறிவுறுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT