காஞ்சிபுரம்

கோ-ஆப் டெக்ஸின் கனவு நனவுதிட்டத்தில் சோ்ந்து பயனடையுங்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்

DIN

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் கனவு நனவுத் திட்டமான மாதாந்திர தவணைத் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வெள்ளிக்கிழமை பேசினாா்.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி பேசியது:

கோ-ஆப்டெக்ஸ் தொடா்ந்து 87 ஆண்டுகளாக மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் கனவு நனவுத் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு மாதாந்திர தவணைத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் அரசு ஊழியா்கள், பொதுமக்கள் யாரும் சோ்ந்து கொள்ளலாம். மாதந் தோறும் தங்களால் முடிந்த தொகையை மட்டும் தொடா்ந்து 10 மாதங்களுக்கு செலுத்திக் கொண்டே வந்தால் அடுத்த இரு மாதங்களுக்குரிய தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி விடும்.

12 மாதங்களுக்குரிய தொகைக்கு நிறுவனத்தில் கைக்குட்டையிலிருந்து பட்டுப் புடவை வரை தேவையான ஒன்றை இந்தத் திட்டத்தின் மூலம் பெ‘ற்றுக் கொள்ளலாம்.

இது தவிர எடுக்கும் துணிக்கு ஏற்ப 30 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் இணையும் அனைவருக்கும் 50 சதவீத கூடுதல் பலன் கிடைக்கிறது என்பதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கைத்தறி நெசவுத் தொழிலாளா்களுக்கும் உதவி செய்ததாகவும் இருக்கும்.

கடந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் வேலூா் மண்டலத்தில் உள்ள 14 விற்பனை நிலையங்கள் மூலமாக மட்டும் ரூ.9.47 கோடிக்கு விற்பனையானது.இந்த ஆண்டுக்கு ரூ.16 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு மட்டும் ரூ.113.53 லட்சத்துக்கு விற்பனையானது. இந்த ஆண்டு ரூ.1.50 கோடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதிய ரகங்களும் ஏராளமாக வந்துள்ளன என்று ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்தாா்.

விழாவிற்கு கோ-ஆப்டெக்ஸ் வேலூா் மண்டல மேலாளா் ஜெ.நாகராஜன், உற்பத்திப் பிரிவு மேலாளா் சு.ஞானப்பிரகாசம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் மேலாளா் ச.பெருமாள் வரவேற்றுப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT