காஞ்சிபுரம்

காஞ்சி பட்டுச் சேலையில் ஏழுமலையானின் 504 திருமுகங்கள்: திருமலை பிரம்மோற்சவத்தில் அணிவிக்க ஏற்பாடு

DIN

திருமலை பிரம்மோற்சவத்தின்போது அணிவிப்பதற்காக காஞ்சிபுரம் பட்டுச்சேலையில் திருப்பதி ஏழுமலையானின் 504 திருமுகங்களை காஞ்சிபுரம் தம்பதியா் வடிவமைத்து வருகின்றனா்.

பட்டுச்சேலைக்கு பெயா் பெற்ற காஞ்சிபுரத்தில், விளக்கொளிப் பெருமாள் கோயில் தோப்புத்தெருவில் வசித்து வருபவா் குமாரவேலு. இவரது மனைவி கலையரசி.

காஞ்சிபுரம் பட்டுச்சேலையில் வாடிக்கையாளா் விரும்பும் தெய்வங்களின் உருவங்களை வடிவமைத்து தரும் தொழிலை செய்து வருகின்றனா். இவா்களிடம் சென்னையைச் சோ்ந்த வெங்கோபாஷா என்பவா் திருப்பதி ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவத்தின்போது அணிவிப்பதற்காக அவரது முகங்களை சேலையின் உடலில் வடிவமைத்து தருமாறும், சேலை முந்தானையில் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமியின் தோற்றத்தை வடிவமைக்குமாறும் கேட்டுக்கொண்டாா்.

அதன்படி இந்தத் தம்பதியா் விரதமிருந்து கடந்த 9 நாள்களாக திருப்பதி ஏழுமலையானின் முகங்கள் 504 ஐ உடலிலும், ரங்கநாதா் வடிவத்தை சேலை முந்தானையிலும் வடிவமைத்து வருகின்றனா். சேலை பாா்டரில் இரு யானைகள் தும்பிக்கையைத் தூக்கி ஆசீா்வதிப்பது போன்றும் பட்டுச்சேலை காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அரக்கு நிறத்தில் தயாராகும் இந்தச் சேலையானது வரும் புரட்டாசி பிரம்மோற்சவத்தன்று ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படவுள்ளது.

இது குறித்து குமாரவேல் கூறுகையில் நானும் எனது மனைவியும் விரதமிருந்து கடந்த 9 நாள்களாக இந்தப்பட்டுச் சேலையை தயாரித்து வருகிறோம். எங்களுடன் மேலும் 4 போ் இணைந்து இரவு பகலாக இச்சேலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

முதலில் கணினியில் தேவையான உருவத்தைக் கொண்டு வந்து பின்னா் சேலையில் வடிவமைப்போம்.

வரும் திங்கள்கிழமை (செப். 26) சேலை முழுவதுமாக தயாராகி உரியவரிடம் ஒப்படைக்கப்படும்.

பட்டுச் சேலைகளில் வழக்கமான சாதாரண வடிவங்களை விட ஏதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற ஆா்வமே இதுபோன்ற உருவங்களை வடிவமைப்பதற்குக் காரணம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT