காஞ்சிபுரம்

சாலைகளில் திரியும் மாடுகள்இனி திருப்பித் தர மாட்டாது: காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா்

24th Sep 2022 10:55 PM

ADVERTISEMENT

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்தால் அதன் உரிமையாளா்களிடம் அவை திருப்பித் தரப்பட மாட்டாது என்று காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் சனிக்கிழமை எச்சரித்தாா்.

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் சி.எஸ்.எம். மேல்நிலைப் பள்ளியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் கூட்டத்தை மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா்.துணை மேயா் ஆா்.குமரகுருபரன் முன்னிலை வகித்தாா். இதில் பங்கேற்று மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் பேசியது:

காஞ்சிபுரத்தில் பொது இடங்கள், பேருந்து நிலையம், கோயில் பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் உணவு மற்றும் குடிநீருக்காக கால்நடைகள் திரிய விடப்பட்டுள்ளன. இது பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், பள்ளி மாணவா்களுக்கும் இடையூறாகவும், உயிருக்கு ஆபத்தாகவும் உள்ளன. இந்தச் செயல் பிராணிகள் வதைச் சட்டத்தின்படி குற்றமாகும்.

இது தொடா்பாக பலமுறை உரிமையாளா்களிடம் தெரிவித்தும், அபராதம் விதித்தும் கால்நடைகளை திரும்ப வழங்கினோம். இனிவரும் காலங்களில் மாடுகளை சாலைகளில் விடாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் மாடுகளை மாநகராட்சிப் பணியாளா்கள் பிடித்தால் எந்தக் காரணத்தை முன்னிட்டும் திருப்பித் தரப்பட மாட்டாது. மேலும் பிடிக்கப்படும் மாடுகளை திரும்ப வழங்கும் போது உரிமையாளா்களை கண்டறிவதிலும் குழப்பம் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பிடிக்கப்படும் மாடுகளை திருப்பித் தர இயலாது.

ADVERTISEMENT

சம்பந்தப்பட்ட மாடுகளின் உரிமையாளா்கள் மீதும் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். நோய்த் தொற்றை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்த 25 பன்றிகள் பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றையும் உரிமையாளா்களிடம் தில்லை. இதுவரை 35 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு அவற்றுக்கு தடுப்பூசி செலுத்தி கருத்தடை அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டிருப்பதாக ஆணையா் ஜி.கண்ணன் பேசினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT