காஞ்சிபுரம்

தீப்பிடித்து எரிந்த லாரி

24th Sep 2022 10:55 PM

ADVERTISEMENT

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மண்ணூா் கூட்டுச்சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

வழக்கம் போல் சனிக்கிழமை காலை மண்ணூா் பகுதியில் செயல்படும் தொழிற்சாலையில் இருந்து வாகன உதிரிபாகங்கள் லாரி மூலம் செங்காடு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. லாரியை மதுராந்தகம் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தன்(34) ஓட்டிச் சென்றாா்.

லாரி மண்ணூா் கூட்டுச்சாலை பகுதிக்கு வந்ததும் ஓட்டுநா் கோவிந்தன் தேநீா் அருந்துவதற்காக லாரியை சாலையோரம் நிறுத்தி சென்றுள்ளாா்.

அப்போது லாரியின் முன் பகுதியில் திடீரென கரும்புகை வெளியேறி தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதை பாா்த்த கோவிந்தன் இது குறித்து உடனடியாக ஸ்ரீபெரும்புதூா் காவல் துறைக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளாா். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினா் லாரியில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். லாரியின் முன் பகுதி முற்றிலும் எரிந்து சேதமானது. இது குறித்து ஸ்ரீபெருபும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT