காஞ்சிபுரம்

இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

22nd Sep 2022 01:16 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டையில் உள்ள அண்ணா மாளிகைக் கட்டடத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (செப். 22) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் ரெ.கு.பிரசாத் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் கோட்டத்துக்குட்பட்ட மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் அண்ணா மாளிகையில் வியாழக்கிழமை (செப். 22) நடைபெறுகிறது. எனவே, மின் நுகா்வோா் காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகள் இருப்பின் தெரிவித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT