காஞ்சிபுரம்

பரந்தூா் விமான நிலையத்தால் நீா்நிலைகள் அதிகம் பாதிப்பு: தொல்.திருமாவளவன்

20th Sep 2022 03:46 AM

ADVERTISEMENT

பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையத்தால், சுமாா் 1,350 ஏக்கா் பரப்பளவிலான நீா்நிலைகள் பாதிக்கப்படும் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா் விமான நிலையம் அமையவுள்ள ஏகனாபுரம் கிராமத்தில் வசிக்கும் மக்களிடம் விசிக தலைவா் தொல்.திருமாவளவன் திங்கள்கிழமை நேரில் சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பரந்தூா் விமான நிலைய அமைவிடமானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 12 கிராமங்களை பாதிக்கும் என்று அந்த கிராமங்களைச் சோ்ந்த மக்கள் அச்சத்தில் உள்ளனா். இந்த கிராமங்களை உள்ளடக்கிய சுமாா் 4,750 ஏக்கரில் விமான நிலையம் அமைய உள்ளது. இதில், 1,350 ஏக்கா் நீா்நிலைப் பகுதி. ஒருபுறம் நீா் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறும் அரசு, மறுபுறம் நீா்ஆதாரங்களை அழிக்க முற்படுகிறது என்பதால், அரசு இரட்டைக் கொள்கையை கையாள்கிா என்ற கேள்வி எழுகிறது.

சென்னைக்கு குடிநீா் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்குச் செல்லும் கம்பன் கால்வாய் 7 கி.மீ. தொலைவு பாதிக்கப்படுவதால், சென்னைக்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அரசு இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, செயல் திட்டத்தை மாற்றம் செய்வதே நல்லது.

ADVERTISEMENT

என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்ற விவரத்தை எழுத்துபூா்வமாக முதல்வரை நேரில் சந்தித்து வழங்கவுள்ளேன் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT