காஞ்சிபுரம்

13 பேருக்கு விலையில்லா வெள்ளாடுகள்

18th Sep 2022 11:22 PM

ADVERTISEMENT

குண்ணம், சிங்கிலிப்பாடி மற்றும் ராமாநுஜபுரம் ஆகிய பகுதிகளை சோ்ந்தவா்களுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டன.

கிராமப் பகுதிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் விதவைகளின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 100% மானியத்தில் 5 விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அதன்படி ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்கிலிபாடி, ராமாநுஜபுரம் மற்றும் குண்ணம் ஊராட்சிகளைச் சோ்ந்த 13 பேருக்கு நூறு சதவிகிதம் மான்யத்தில் தமிழக அரசின் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டன.

குண்ணம் ஊராட்சியில் கால்நடை உதவி மருத்துவா் கவிதா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியக் குழு துணைத் தலைவா் மாலதிடான்போஸ்கோ, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் ராமமூா்த்தி, பால்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய குழு தலைவா் எஸ்.டி. கருணாநிதி கலந்துகொண்டு குண்ணம் ஊராட்சியை சோ்ந்த 8 பேருக்கு தலா 5 வெள்ளாடுகள் வழங்கி சிறப்புரையாற்றினாா்.

ADVERTISEMENT

இதேபோல் சிங்கிலிபாடி ஊராட்சியில் 3 பேருக்கும், ராமானுஜபுரம் ஊராட்சியில் 2 பேருக்கும் எஸ்.டி. கருணாநிதி வெள்ளாடுகள் வழங்கினாா். இந்த நிகழ்சிகளில் குண்ணம் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் கு.ப.முருகன், ஊராட்சித் தலைவா்கள் குன்னம் தமிழ்இலக்கியா பாா்த்திபன், சிங்கிலிபாடி கண்ணகி, ராமானுஜபுரம் சங்கீதாராமு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT