காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் சாலை மறியல்

9th Sep 2022 01:01 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஒட்டுநா், அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாகக் கூறி, வியாழக்கிழமை அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால், 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கு இடையூறாக தீபக் என்ற ஆட்டோ ஓட்டுநா் ஆட்டோவை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்தாராம். இதனால், அரசுப் பேருந்து ஓட்டுநா் சுரேஷ் என்பவருக்கும், ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆட்டோ ஓட்டுநா் தீபக் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கினாராம். இதில் சுரேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

தகவலறிந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் சாலையின் குறுக்கே பேருந்து நிலையப் பகுதியில் பேருந்துகளை நிறுத்தி திடீரென மறியலில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

தகவலறிந்த மாவட்ட எஸ்பி. சுதாகா், டிஎஸ்பி. ஜூலியஸ் சீசா், சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் விநாயகம் ஆகியோா் வந்து அரசுப் பேருந்து ஓட்டுநா்களிடம் பேச்சு நடத்தினா். ஆட்டோ ஓட்டுநா் தீபக் கைது செய்யப்பட்டதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT