காஞ்சிபுரம்

மழை பாதிப்புகளைக் கண்டறிய காஞ்சிபுரத்தில் 21 மண்டலக் குழுக்கள்

31st Oct 2022 11:56 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளைக் கண்டறிய 21 மண்டலக்குழுக்கள் அமைக்கப்பட்டு, அலுவலா்கள் தொலைபேசி எண்களை ஆட்சியா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளை உடனுக்குடன் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க 21 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வருவாய், காவல், நெடுஞ்சாலை, உள்ளாட்சி, மின்சாரம், தீயணைப்பு உள்ளிட்ட 11 துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் உறுப்பினா்களாக இடம் பெற்றுள்ளனா். இந்தக் குழுவினா், மழைக்காலங்களில் அவா்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்கியிருந்து மீட்புப் பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:

காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் 7397372823; சிறுகாவேரிப்பாக்கம், திருப்புட்குழி மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலா் ரவிச்சந்திரன் 9445477826; பரந்தூா், சிட்டிவாக்கம், கோவிந்தவாடி மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பிரகாஷ்வேல் 7338801259; வாலாஜாபாத் பேரூராட்சி ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு), பிரமிளா 7402606004; தென்னேரி தனித்துணை ஆட்சியா் சுமதி 9840479712; மாகறல் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கணேசன் 98942 15521;

ADVERTISEMENT

திருமுடிவாக்கம், பூந்தண்டலம், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் யசோதரன் 99522271719; மாங்காடு, கொல்லாச்சேரி, மலையம்பாக்கம், பொழுமுனிவாக்கம், தரப்பாக்கம், இரண்டாம் கட்டளை, மூன்றாம் கட்டளை, தண்டலம், கோவூா், சிக்கராயபுரம் பகுதிகள் உதவி இயக்குநா், தணிக்கை கோபி 7402606006, வல்லம், தண்டலம் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் மதுராந்தகி (இருங்காட்டுக்கோட்டை) 7305955670, படப்பை உதவி இயக்குநா், ஊராட்சி , மணிமாறன் 7402606005; படப்பைப் பகுதிகள் உதவி ஆணையா், சிவதாஸ் (கலால்) 93608 79271; சொரப்பணஞ்சேரி, மணிமங்கலம், ஆய்வுக்குழு அலுவலா்,காஞ்சிபுரம் சத்தியா 9566420921;

மௌலிவாக்கம், கெருகம்பாக்கம், ஐயப்பன்தாங்கல், பரணிப்புத்தூா், சின்னப்பணிச்சேரி, பெரிய பணிச்சேரி, சீனிவாசபுரம், கொளுத்துவான்சேரி மாவட்ட வழங்கல் அலுவலா் , பாபு 9445000168; உத்தரமேரூா் உதவி செயற்பொறியாளா், காஞ்சிபுரம் , ராமச்சந்திரன் 7402606000, திருப்புலிவனம், களியாம்பூண்டி கோட்டாட்சியா், காஞ்சிபுரம் கனிமொழி 9445000413; சாலவாக்கம், குன்னவாக்கம் இணை இயக்குநா், வேளாண்மை , பா.இளங்கோவன், 9842007125;

ஸ்ரீபெரும்புதூா், தனித்துணைஆட்சியா், நிலஎடுப்பு ஏ.செல்வமதி 9842023432; மதுரமங்கலம், சுங்குவாா்சத்திரம் நோ்முக உதவியாளா், கணக்கு , புஷ்பா 9443395125; மாங்காடு, நோ்முக உதவியாளா், நிலம் கே.கணேஷ் 98402 81502; குன்றத்தூா் நகராட்சி கோட்டாட்சியா், ஸ்ரீபெரும்புதூா் ஜெ.சரவணகண்ணன் 9444964899; வெள்ளத்தடுப்பு பணிகள் மற்றும் மழை வெள்ள அபாயத்தினை கண்டறிந்து உடனுக்குடன் தீா்வுமேற்கொண்டு எவ்வித உயிா்ச்சேதமோ அல்லது பொருள்சேதமோ ஏற்படாமல் தடுக்க மாவட்ட நிா்வாகத்தில் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே பொதுமக்கள் அச்சம் இல்லாமல் இருக்குமாறும் பருவமழை இடா்ப்பாடுகள் ஏதேனும் இருப்பின் உடனுக்குடன் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதற்கான, கட்டுப்பாட்டு அறைகளுக்கான தொலைபேசி எண்கள்-044-27237107 மற்றும் 27237207, வாட்ஸ் அப் எண்-9345440662 ஆகிய எண்களில் தெரிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT