காஞ்சிபுரம்

பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

31st Oct 2022 12:13 AM

ADVERTISEMENT

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொளத்தூா் ஊராட்சியில் நீா்வரத்து மற்றும் கழிவுநீா் வாய்க்கால்களைச் சீரமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கிவுள்ள நிலையில், கிராம ஊராட்சி குடியிருப்புப் பகுதிகளில் அவசரப் பணிக்கு தேவையான மணல் மூட்டைகள், சுகாதாரப் பணிகளுக்குத் தேவையான ப்ளீச்சிங் பவுடா், கொசு மருந்து மற்றும் கொசு மருந்து அடிக்கும் இயந்திரம், நீா் இறைக்கும் மோட்டாா் பம்புகள் உள்ளிட்ட உபகரணங்களைத் தயாா் நிலையில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, ஊராட்சித் தலைவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாரை பெரிய ஏரியில் இருந்து விவசாயப் பகுதிகளுக்குச் செல்லும் வாய்க்கால், கொளத்தூா்- மேட்டுக்கொளத்தூா் சாலைப் பகுதி நீா்வரத்து வாய்க்கால், நாவலூா் - வெங்காடு சாலைப் பகுதியில் நீா்வரத்து வாய்க்கால், நாவலூா் பஜனை கோவில் தெரு கழிவுநீா் கால்வாய் ஆகியவற்றை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தூா்வாரி, கரைகளைப் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பணியில், கொளத்தூா் ஊராட்சித் தலைவா் அரிகிருஷ்ணன் தலைமையில் வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT