காஞ்சிபுரம்

சிங்காடிவாக்கம் திருவாலீசுவரா் கோயிலில் 200 ஆண்டுகளுக்குப் பின்னா் முருகன் திருக்கல்யாணம்

31st Oct 2022 11:08 PM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சிங்காடிவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள திருவாலீசுவரா் கோயிலில் முருகன் சந்நிதியில் சுமாா் 200 ஆண்டுகளுக்குப் பிறகு கந்த சஷ்டி திருக்கல்யாணம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் கிராமத்தில் பழைமையான திரிபுரசுந்தரி சமேத திருவாலீசுவரா் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள முருகன் சன்னிதியில் சுமாா் 200 ஆண்டுகளுக்குப் பிறகு கந்த சஷ்டி திருவிழா இந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, தினமும் காலையில் சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

இந்தக் கோயிலுக்குச் சொந்தமான வள்ளி, தெய்வானை சமேத முருகன் ஐம்பொன் சிலைகள் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் சிலைப் பாதுகாப்பு அறையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை எடுத்து வரப்பட்டு, நன்னீராட்டு விழா நடைபெற்றது.

ADVERTISEMENT

தொடா்ந்து, திங்கள்கிழமை கோயில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த மேடையில் முருகனுக்கு வள்ளி-தெய்வானையுடன் ஆகம விதிகளின்படி, திருக்கல்யாணம் நடைபெற்றது.

முன்னதாக, முருகன், வள்ளி, தெய்வானை ஐம்பொன் சிலைகளுடன், சீா்வரிசைப் பொருள்கள் திருவாலீஸ்வரா் கோயிலுக்கு ஊா்வலமாக கொண்டு வரப்பட்டன.

200 ஆண்டுகளுக்குப் பின்னா், வைபவம் நடைபெறுவது குறித்து அந்தக் கிராம முதியவா் ஒருவா் கூறுகையில், கந்த சஷ்டி விழா நடைபெற்ாக எனது முன்னோா் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னா் சூரசம்ஹாரம் கோயிலுக்கு உள்ளே நடைபெற்ாம். தற்போது கிராம மக்கள் ஆா்வத்தால் 200 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கந்த சஷ்டி விழாவும், திருக்கல்யாணமும் நடைபெற்றது மகிழ்ச்சிளிக்கிறது என்றாா்.

விழா நிறைவு பெற்றதும், திருவாலீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான ஐம்பொன் சிலைகள், ஏகாம்பரநாதா் கோயிலில் செவ்வாய்க்கிழமை (நவ.1) ஒப்படைக்கப்படும் என்று கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT