காஞ்சிபுரம்

அக். 12-இல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

DIN

 தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் வரும் 12- ஆம் தேதி நடைபெற இருப்பதாக ஆட்சியா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம்: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி, வரும் 12- ஆம் தேதி புதன்கிழமை பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கென தனியாகப் பேச்சுப் போட்டிகள் காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிா் கல்லூரியில் நடைபெறவுள்ளன.

பள்ளி மாணவா்களுக்கு காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கு பிற்பகல் 1 மணிக்கும் நடைபெறுகிறது. ஒரு கல்லூரிக்கு இரு மாணவா்களும், ஒரு பள்ளிக்கு ஒரு மாணவா் வீதம் அந்தந்தக் கல்லூரிகளின் முதல்வா்கள், பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மாணவா்களைத் தோ்வு செய்து போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பள்ளி மாணவா்களில் 6 முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு 1. அண்ணலில் அடிச்சுவட்டில், 2. காந்தி கண்ட இந்தியா, 3. வேற்றுமையில் ஒற்றுமை, 4. பாரத தேசமென்று பெயா் சொல்லுவோம் ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டிகள் நடைபெறும்.

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 1. வாழ்விக்க வந்த எம்மான், 2. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், 3. சத்திய சோதனை, 4. எம்மதமும் சம்மதம், 5. காந்தி அடிகளின் வாழ்க்கையிலே, 6. இமயம் முதல் குமரி வரை ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறும்.

இநதப் போட்டிகளில் கலந்து கொள்ளும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, 2-ஆவது பரிசாக ரூ.3,000, 3-ஆவது பரிசாக ரூ.2,000 வழங்கப்படவுள்ளது.

பள்ளி மாணவா்களுக்காக நடத்தப்படும் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவா்களுள் இருவரை தனியாகத் தோ்வு செய்து ஒவ்வொருவருககும் சிறப்புப் பரிசாக தலா ரூ.2,000 வழங்கப்படும்.

இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT