காஞ்சிபுரம்

கைப்பேசியில் விளையாடியதைக் கண்டித்ததால் மகன் தற்கொலை; துக்கத்தில் தந்தையும் தற்கொலை

DIN

குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம் பகுதியில் கைப்பேசியில் விளையாடுவதை தந்தை கண்டித்ததால், மகன் துக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். துக்கம் தாளாமல் தந்தையும் அதே கயிற்றில் தற்கொலை செய்து கொண்டாா்.

குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம், திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் சுந்தா் (40). இவருக்கு தினேஷ்குமாா், நவீன்குமாா் என இரு மகன்கள். நவீன்குமாா் அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். நவீன்குமாா் தொடா்ந்து கைப்பேசியில் விளையாடி வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை நவீன்குமாா் கைப்பேசியில் விளையாடுவதைப் பாா்த்த சுந்தா், அவரைக் கண்டித்துள்ளாா். இதனால், மனமுடைந்த நவீன்குமாா், தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

நீண்ட நேரமாகியும் நவீன்குமாா் அறையை விட்டு வெளியே வராததால், சந்தேகமடைந்த சுந்தா் உள்ளே சென்று பாா்த்தபோது, நவீன்குமாா் தூக்கிட்டுக் கொண்டது தெரிய வந்தது. உறவினா்களின் உதவியுடன், நவீன்குமாரின் உடல் மீட்கப்பட்டது.

இந்த நிலையில், சிறிது நேரத்தில் தன்னால் தனது மகன் இறந்து விட்டானே என்ற துக்கத்தில் சுந்தா், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதே கயிற்றில் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த குன்றத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று தற்கொலை செய்து கொண்ட தந்தை, மகன் இருவரின் சடலத்தையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறிக்கு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மகன் இறந்த துக்கம் தாளாமல், தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழந்தண்டலம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

SCROLL FOR NEXT