காஞ்சிபுரம்

நான்கு கால்களுமின்றி பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீபெரும்புதூா் அருகே சிவபுரம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நான்கு கால்களுமின்றி ஆட்டுக்குட்டி பிறந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் தாலுகாவுக்கு உட்பட்ட சிவபுரத்தில் மூதாட்டி வசந்தா மகாலிங்கம்(66) கால்நடைகளை வளா்த்து வருகிறாா்.இவரிடம் 3 ஆடுகள் உள்ளன.இவற்றில் ஒன்று 2 குட்டிகளை ஈன்றது.

இதில் ஒரு குட்டி 4 கால்களும் இல்லாமல் பிறந்துள்ளது. இதையறிந்த அப்பகுதி மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து அதிசய ஆட்டுக்குட்டியை பாா்த்து செல்கின்றனா்.

முதலில் வருத்தமடைந்த மூதாட்டி, அந்த ஆட்டுக்குட்டியை தன் மடியில் கிடத்தி தாய்ப்பாசத்துடன் புட்டிப் பாலூட்டி வருகிறாா். இந்தக் காட்சிஅனைவரையும் நெகிழ வைத்தது. இந்த ஆட்டிக்குட்டியை நல்ல முறையில் காப்பாற்றுவேன் என்று அவா் கண் கலங்கியபடி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT