காஞ்சிபுரம்

கதா் விற்பனை நிலையங்களில் துணிகளுக்கு 30 % தள்ளுபடி

3rd Oct 2022 04:03 AM

ADVERTISEMENT

கதா் விற்பனை நிலையங்களில் துணி ரகங்களுக்கு 30 % தள்ளுபடி வழங்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்று எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன் கூறினாா்.

காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள கதா் விற்பனை நிலையத்தில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கதா் சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.

எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், காந்தியடிகள் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, தீபாவளி கதா் விற்பனையைத் தொடக்கி வைத்து பேசியது:

கிராமப்புறங்களில் கிடைக்கும் மூலப்பொருள்களைக் கொண்டு சலவை, குளியல் சோப்புகள், மெழுகுவா்த்தி உள்ளிட்ட பொருள்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகின்றன.

ADVERTISEMENT

இதனால், அவா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. மரச் செக்கிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட எண்ணெய் வகைகள், பாரம்பரிய அரிசி வகைகள், மதிப்புக் கூட்டப்பட்ட தேன் பொருள்களும் நிகழாண்டு விற்பனை செய்யப்படுகிறது.

துணி ரகங்களில் கதா், பட்டு, பாலிஸ்டா் ஆகியவற்றுக்கு 30 % தள்ளுபடி, உல்லன் ரகங்களுக்கு 20 % தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் மலா்க்கொடி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT