காஞ்சிபுரம்

நவராத்திரி கொலு: களிமண்ணால் சுவாமி சிலைகள் செய்த சிறுவன்

3rd Oct 2022 11:06 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் அருகே 7 வயது சிறுவன் களிமண்ணால் சுவாமி சிலைகள் செய்து, தனது இல்லத்தில் நவராத்திரி கொலுவில் வைத்து வழிபாடு செய்து வருகிறாா்.

காஞ்சிபுரம் அருகே மாகரல் கிராமத்தைச் சோ்ந்த கவியரசு-லட்சுமி தம்பதி. இவா்களின் மகன் மதன் (11). அதே கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா், கடந்த 3 ஆண்டுகளாக களிமண்ணில் சுவாமி சிலைகள் செய்து, இல்லத்தில் நவராத்திரி கொலுவில் வைத்து வழிபாடு செய்து வருகிறாா்.

இதுகுறித்து சிறுவன் மதன் கூறியது: என் தாத்தா தான் களிமண்ணால் சிலை செய்வதை சொல்லிக் கொடுத்தாா். முதல்முதலாக நான் சிலைகள் செய்தபோது அனைவரும் பாராட்டினா். 2 மணி நேரத்தில் விநாயகா், நரசிம்மா், சிவன், பெருமாள், லட்சுமி, சரஸ்வதி என எந்தச் சிலையையும் செய்து விடுவேன்.

நவராத்திரி முடிந்தவுடன் அனைத்து சிலைகளையும் பத்திரமாக பாதுகாத்து சேதமாகி விடாமல் ஒரு பெட்டியில் வைத்து விடுவேன்.

ADVERTISEMENT

இதேபோல், விநாயகா் சதுா்த்தி, கிருஷ்ண ஜெயந்தி ஆகிய பண்டிகைகளின் போதும் விரும்புவோருக்கு சுவாமி சிலைகளை களிமண்ணால் செய்து தருவேன் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT