காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஸ்ரீதேசிகன் கோயிலில் தேரோட்டம்!

2nd Oct 2022 12:04 PM

ADVERTISEMENTகாஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள தூப்புல் ஸ்ரீவேதாந்த தேசிகன் திருக்கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

இதையும் படிக்க: மாலத்தீவில் ஜாலி! அமலா பாலின் குத்தாட்டம்! (விடியோ)

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது தூப்புல் ஸ்ரீவேதாந்த தேசிகன் திருக்கோயில். இக்கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. விழா தொடங்கிய நாளிலிருந்து தினசரி காலையில் தேசிகன் தங்கப்பல்லக்கிலும், மாலையில் வெவ்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி வீதியுலா வந்து அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தேரில் தேசிகன் சுவாமிகள் ராஜ அலங்காரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி புதன்கிழமை விளக்கொளிப் பெருமாள் மங்ளாசாசனமும், தேவராஜன் சுவாமி பெரிய தங்கப்பல்லக்கில் மங்களாசாசனத்திற்கு அஞ்சலித் திருக்கோலத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், இரவு பூப்பல்லக்கில் தேசிகன் வீதியுலாவும் நடைபெறுகிறது.

இதையும் படிக்க: சாம்பியன் பட்டம் வென்றது இந்திய லெஜெண்ட்ஸ் அணி! (ஹைலைட்ஸ் விடியோ)

ADVERTISEMENT

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவிளக்கொளி பெருமாள் வேதாந்த தேசிகன் ச்ரவணம் அறக்கட்டளை உறுப்பினர்கள், கோயில் தக்கார் பு.மு.வேதமூர்த்தி, செயல் அலுவலர் கோ.ஸ்ரீதரன் ஆகியோர் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT