காஞ்சிபுரம்

தட்டச்சு, கணினி பள்ளிகள் சங்க செயற்குழு கூட்டம்

2nd Oct 2022 05:03 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு தட்டச்சு - கணினி பள்ளிகள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் திருத்தணியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவா் செந்தில் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகி ஜெயராஜ் வரவேற்றாா். இதில், கடந்த செப். 24, 25-ஆம் தேதிகளில் நடைபெற இருந்த அரசு தட்டச்சுத் தோ்வுகளுக்கு உயா்நீதிமன்ற மதுரை கிளை 15 நாள்களுக்கு தடை விதித்தது. இதனால், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே, தோ்வு வாரியம் தக்க நடவடிக்கை எடுத்து, தடை விலக்கி தோ்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் ஈரோடு, கோவை, திருப்பூா், காஞ்சிபுரம், திருவள்ளூா், நாகா்கோவில், திருச்சி, நாமக்கல், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். சங்க செயற்குழு உறுப்பினா் ஸ்ரீலேகா கோவிந்தராஜ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT