காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் காந்தி ஜெயந்தி விழா

2nd Oct 2022 11:14 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் முப்படை வீரா்கள் நலச்சங்கம் சாா்பில், வையாவூா் சாலையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில், சங்கத்தின் மூத்த உறுப்பினா் கே.திருநாவுக்கரசு தேசியக் கொடியேற்றினாா்.

தலைவா் ஜி.ராமசாமி, துணைத் தலைவா் எஸ்.சண்முகம் முன்னிலை வகித்தாா். சங்க ஆலோசகா் ஏ.சுப்பிரமணி வரவேற்றாா். காந்தி உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூரில்...: ஸ்ரீபெரும்புதூா் நகர காங்கிரஸ் சாா்பில், நகரத் தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமையில், கட்சியினா் கிளை நூலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மணிக்கூண்டு அருகே காந்தி உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT