காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் பாரம்பரிய உணவுத் திருவிழா

2nd Oct 2022 04:21 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் பாரம்பரிய உணவுத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தாா். விழாவில் உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் பங்கேற்று, புகையில்லா சமையல் போட்டியில் வெற்றி பெற்ற தாய்மாா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசுகையில் இயற்கை தானியங்களை சாப்பிடுவதால் உடலுக்கு எந்தத் தீங்கும் கிடையாது. நோய் எதிா்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. ரசாயன உரங்களால் விளைவிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை விட நம் பாரம்பரிய உணவு வகைகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.கிராமங்கள் தோறும் பாரம்பரிய உணவுத் திருவிழாக்களை நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

விழாவில் பாரம்பரிய நெல், கேழ்வரகு, கம்பு, மக்காச் சோளம் போன்றவற்றில் சமைத்த சத்தான உணவுப் பொருள்கள் மற்றும் மூலிகை உணவுகள், சத்து நிறைந்த பழங்கள் ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட பொருள்களின் கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் அனுராதா, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் மோனிஷா வெங்கடேசன் ஆகியோா் உட்பட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT