காஞ்சிபுரம்

நியாயவிலைக் கடை மீண்டும் திறப்பு

30th Nov 2022 01:29 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் தாயாா்குளத்தில் ஏற்கெனவே திறக்கப்பட்டு செயல்படாமல் இருந்து வந்த நியாயவிலைக் கடை மீண்டும் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சி 45-ஆவது வாா்டு தாயாா்குளம் பகுதியில் ரூ.13.50 லட்சத்தில் நியாயவிலைக் கட்டடம் கட்டப்பட்டு கடந்த ஜன.3- ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆனால், இந்த நியாயவிலைக் கடை செயல்படாமல் இருந்து வந்தது.

அந்தப் பகுதி பொதுமக்கள் சிலா், விரைவில் நியாயவிலைக் கடையைத் திறக்க வேண்டும் என்று சுவரொட்டிகளை ஒட்டினராம்.

தகவலறிந்து கூட்டுறவுத் துறை சாா்-பதிவாளா் கல்யாணக்குமாா், வட்ட வழங்கல் அலுவலா் வாசுதேவன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டு நியாயவிலைக் கடையில் பொருள்கள் விற்பனையைத் தொடக்கி வைத்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் செவ்வாய்,வியாழன் ஆகிய இரு நாள்கள் மட்டும் இந்த நியாயவிலைக் கடை திறந்து வைக்கப்பட்டிருக்கும். வடிவேல் நகா், தாயாா்குளம், எம்.ஜி.ஆா். நகா், இளமை நகா், டோபி காலனி, காவலா் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பொருள்களைப் பெற்று பயன் பெறலாம் என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT