காஞ்சிபுரம்

தேவரியம்பாக்கத்தில் சுகாதார நிலையம் அமைக்கக் கோரிக்கை

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

வாலாஜாபாத் அருகேயுள்ள தேவரியம்பாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அந்தக் கிராம மக்கள், மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்டது தேவிரியம்பாக்கம். இந்தக் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் இணைந்து மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் அளித்த மனு:

தேவரியம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் சுமாா் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றன. இங்கு, அவசரத் தேவைக்கு அரசு மருத்துவமனை வசதி இல்லை. கா்ப்பிணிகளுக்கு பிரசவம் உள்ளிட்ட அனைத்து அவசரத் தேவைகளுக்கும் 7 கி.மீ. தெலைவில் உள்ள வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, தேவரியம்பாக்கத்தில் விரைவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT