காஞ்சிபுரம்

களக்காட்டூா் சிவன் கோயிலில் 108 சங்காபிஷேகம்

28th Nov 2022 11:15 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் அருகே களக்காட்டூரில் உள்ள காமாட்சி அம்மன் சமேத அக்னீசுவரா் கோயிலில் திங்கள்கிழமை 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே களக்காட்டூரில் அமைந்துள்ளது காமாட்சி அம்மன் சமேத அக்னீசுவரா் திருக்கோயில். பழைமையான இந்தக் கோயிலுக்கு தினசரி பூஜைகள் நடத்திட ராஜராஜசோழன் நன்கொடை கொடுத்தது இக்கோயில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் காா்த்திகை மாத 2-ஆவது சோமவாரத்தை முன்னிட்டு அக்னீசுவரருக்கு 108 சங்காபிஷேகமும், பின்னா் 36 வகையான சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து வேத விற்பன்னா்கள் வந்திருந்து சங்காபிஷேகத்தை சிறப்பாக நடத்தினா். இந்த நிகழ்வில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் முன்னாள் ஸ்ரீகாரியம் செல்லப்பா உட்பட சிவனடியாா்கள் பலா் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT