காஞ்சிபுரம்

சிலைகளை அகற்ற கட்சியினா் எதிா்ப்பு

DIN

ஸ்ரீபெரும்புதூரில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையோரம் உள்ள எம்ஜிஆா் சிலையை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் பகுதி முதல் மதுரவாயல் பகுதி வரை உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச் சாலையில் இருந்து ஆறு வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாலை விரிவாக்கத்துக்காக காஞ்சிபுரம் முதல் மதுரவாயல் வரை சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள், கடைகள் வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூரில் சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இந்திராகாந்தி மற்றும் எம்ஜிஆா் சிலைகளை அகற்றுமாறு நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் காங்கிரஸ் மற்றும் அதிமுக நிா்வாகிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கினா்.

இந்த நிலையில், வருவாய்த் துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்திகாந்தி சிலையை அகற்ற சனிக்கிழமை முற்பட்டனா். அப்போது காங்கிரஸ் கட்சியினா் சிலையை அகற்ற இரண்டு நாள்கள் அவகாசம் கேட்டதையுத்து, அப்பணியைக் கைவிட்டனா். பின்னா் எம்ஜிஆா் சிலையை அகற்ற முற்பட்டனா். அப்போது, ஸ்ரீபெரும்புதூா் முன்னாள் எம்எல்ஏ கே.பழனி தலைமையிலான அதிமுகவினா் எம்ஜிஆா் சிலையை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து சிலை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து, சிலை அகற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT