காஞ்சிபுரம்

கொசுக்கள் பற்றிய ஆராய்ச்சி:காஞ்சிபுரம் மாணவிக்கு முதல் பரிசு

DIN

கொசுக்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு காஞ்சிபுரம் ஏனாத்தூா் சங்கரா கலைக் கல்லூரி மாணவி ஆ.கிருத்திகா முதல் பரிசு பெற்றுள்ளதாக அந்தக் கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் நிகழ் மாதம் 25, 26 ஆகிய இரு தேதிகளில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தின் சாா்பில், மாநில அளவிலான மாணவா் ஆராய்ச்சித் திட்டம் தொடா்பான கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில் சங்கரா கலை-அறிவியல் கல்லூரியில் உயிரியல் தொழில்நுட்பத் துறையில் முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்த ஆ.கிருத்திகா கலந்து கொண்டாா்.

இவா், கொசுக்களுக்கு எதிரான உயிரியல் கலவைக்கான தனது ஆராய்ச்சிக்காக மாநில அளவில் முதல் பரிசு பெற்றாா்.

மாணவியின் ஆய்வுக்காக அவரை ஊக்கப்படுத்தி, முதல் பரிசு பெறக் காரணமாக இருந்த கல்லூரித் துறைத் தலைவா் பா.ரமேஷ் மற்றும் துறைப் பேராசிரியா்களுக்கும் பாராட்டு தெரிவித்தோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT