காஞ்சிபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழுக் கூட்டம்

27th Nov 2022 11:44 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடுவீரப்பட்டு அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநிலத் துணைத் தலைவா் இ.பாரூக் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலா் சித்திக், மாவட்ட தலைவா் அக்ரம், மாவட்ட செயலா் அன்சாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் ரத்த தான முகாம்களை நடத்துதல், டெங்கு விழிப்புணா்வை மேற்கொள்ளுதல், நிலவேம்புக் குடிநீரை விநியோகம் செய்தல், மழை நிவாரணப் பணிகளைச் செய்தல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT