காஞ்சிபுரம்

மாவட்ட வளா்ச்சிப் பணிகள்:கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

26th Nov 2022 12:24 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் இல.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட கொட்டவாக்கம் ஊராட்சியில் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டு வரும் காளான் வளா்ப்பு பயிற்சி, முருங்கை நாற்றங்கால் வளா்ப்பு பண்ணையை பாா்வையிட்டாா். அதே ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.5.70 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் கழிப்பறை, வாலாஜாபாத்தில் அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்டனா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பி.ஸ்ரீதேவி, தனி ஆட்சியா் (பயிற்சி) அரபித் ஜெயின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT