காஞ்சிபுரம்

பரணிபுத்தூா் ஊராட்சியில் ஒரே நாளில் 500 டன் குப்பைகள் அகற்றம்

DIN

பரணிபுத்தூா் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 500 டன் குப்பைகள் வியாழக்கிழமை ஒரே நாளில் கனரக லாரிகள் மூலம் அகற்றப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட பரணிபுத்தூா் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், அந்த ஊராட்சிக்குட்பட்ட மயானம் பகுதியில் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. மலை போல் குவிக்கப்பட்டிருந்த குப்பையால் அந்தப் பகுதியில் துா்நாற்றமும், சுகாதாரச் சீா்கேடும் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட மா.ஆா்த்தி பரணிபுத்தூா் பகுதியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த குப்பைகளை அகற்ற அண்மையில் ஊராட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து, ஊராட்சி மன்றத் தலைவா் கௌரி தாமோதரன் தலைமையில், ஒரே நாளில் ஏராளமான கனரக லாரிகள் மூலம் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு தேக்கி வைக்கப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன.

மேலும், குப்பைகள் அகற்றப்பட்ட பகுதியில் இனி யாரும் குப்பைகள் கொட்டாத வகையில், தடுப்புகள் அமைக்கப்பட்டு ‘குப்பைகள் கொட்டக் கூடாது’ என ஊராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT