காஞ்சிபுரம்

விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு: 7,350 மெ.டன் விதைகள் விற்க தடை

25th Nov 2022 06:38 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் தனியாா் விதை விற்பனை நிறுவனங்களில் விதை ஆய்வு துணை இயக்குநா் தலைமையிலான பறக்கும் படையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்து, 7,350 மெ.டன் அளவிலான நெல் மற்றும் காய்கறி விதைகளை விற்கத் தடை விதித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியாா் விதை விற்பனை நிறுவனங்கள் பலவற்றில் விதை ஆய்வு துணை இயக்குநா் ஜி.சோமு தலைமையிலான பறக்கும்படையினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

தகவல் பலகை வைத்திருப்பது, இருப்பு புத்தகம் பராமரிப்பு, முளைப்புத் திறன் சான்று வைத்திருப்பது,விவசாயிகளுக்கு முறையாக ரசீது வழங்கியது உள்ளிட்டவை முறையாக பராமரிக்கப்படுகிா என ஆய்வு செய்தனா்.

ஆய்வில் உரிய ஆவணங்கள் இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததாக 7,350 மெ.டன் நெல் விதைகள் மற்றும் காய்கறி விதைகளை விற்பனை செய்ய தடை விதித்தனா்.

ADVERTISEMENT

தடை செய்யப்பட்ட விதைகளின் மொத்த மதிப்பு ரூ.2.42 லட்சம் எனவும், முளைப்புத் திறன் இல்லாத விதைகளை விற்பனை செய்தால் கடை உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துணை இயக்குநா் ஜி.சோமு தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT