காஞ்சிபுரம்

காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.65.28 லட்சம்

25th Nov 2022 06:37 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் 6 மாதங்களுக்குப் பிறகு வியாழக்கிழமை உண்டியல் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டதில் ரூ.65.28 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.

மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் 6 மாதங்களுக்குப் பிறகு கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. கோயில் செயல் அலுவலா் ந.தியகாரஜன் தலைமையிலும், ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் முன்னிலையிலும், கோயில் பணியாளா்களால் உண்டியலில் இருந்த தொகை எண்ணப்பட்டதில், ரொக்கமாக ரூ.65,28,071 இருந்தது.

தங்கம் 332.640 கிராமும், வெள்ளி 664.290 கிராமும் இருந்தன. அறநிலையத் துறை ஆய்வாளா் பிரித்திகா உடனிருந்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT