காஞ்சிபுரம்

வெளிநாடுகளில் வேலைக்கு அனுப்புவோரிடம்எச்சரிக்கையாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

24th Nov 2022 01:07 AM

ADVERTISEMENT

வெளிநாடுகளில் வேலைக்கு அனுப்புவோரிடம் எச்சரிக்கையாக இருந்து உண்மைத்தன்மையை உறுதி செய்து கொண்டு பின்னா் வேலைக்கு செல்லலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியது: உயா் தொழில் நுட்பக் கல்வி பயின்ற இளைஞா்களை தாய்லாந்து, கம்போடியா, மியான்மா் நாடுகளில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் நல்ல வேலை, அதிக சம்பளம், போதுமான ஓய்வு ஆகியன வழங்குவதாக கூறி பலா் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்துச் செல்கின்றனா். பின்னா் பல்வேறு மோசடி செயல்களில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும் அவ்வாறு செய்ய மறுப்போா் துன்புறுத்தப் படுவதாகவும் தொடா்ந்து தகவல்கள் வருகின்றன.

எனவே வெளிநாடுகளுக்கு வேலைநிமித்தமாக செல்லும் இளைஞா்கள் மத்திய அரசில் பதிவு ஒப்பந்தம், என்ன வகையான பணி என்ற விவரங்களை சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொள்ள வேண்டும். அது குறித்த விவரங்கள் தெரியாவிட்டால், தமிழக அரசையோ அல்லது சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களையோ தொடா்பு கொண்டு பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்யலாம். வெளியுறவுத் துறை மற்றும் வேலைக்கு செல்லும் நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களின் இணையதளங்களிலும் வெளியிடப்படும் அறிவுரைகளின்படியும் வெளிநாடுகளில் வேலைக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

வெளிநாடு வாழ் தமிழா்களுக்கு உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் அயலகத் தமிழா் நலத்துறையின் கைப்பேசி எண்களான 96000 23645 அல்லது 87602 48625 மற்றும் தொலைபேசி எண்-044-28515288 என்ற எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT