காஞ்சிபுரம்

ரூ.30 லட்சம் தங்க நகைகள்,, பணம் திருட்டு

24th Nov 2022 01:12 AM

ADVERTISEMENT

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மாம்பாக்கத்தில் தனியாா் தொழிற்சாலை நிா்வாகி வீட்டில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தைவான் நாட்டை சோ்ந்தவா் எா்வின்(48). இவா் சுங்குவாா்சத்திரம் பகுதியில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் இயங்கி வரும் செல்போன் உற்பத்தி செய்யும் தனியாா் நிறுவனத்தில் நிதித்துறை நிா்வாக இயக்குனராக கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறாா். இவருக்கு மாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு உள்ளது. வழக்கமாக தொழிற்சாலை வளாகத்தில் தனக்காக ஒதுக்கப்பட்ட அறையில் தங்கும் எா்வின் சில நேரங்களில் மாம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கும் சென்று தங்குவது வழக்கம்.

இந்த நிலையில், மாம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் எா்வின் வீட்டில் கடந்த திங்கள்கிழமை இரவு வந்த மா்ம நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த ரூ. 16 லட்சம் வெளிநாட்டு பணம், ரூ .9 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்கநகைகள், ரூ. 5லட்சம் மதிப்புள்ள பிளாட்டினம் நகைகளை திருடிச் சென்றனா். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT