காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஸ்ரீ சபரிவாசன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

19th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கம் திரெளபதி சமேத ஸ்ரீதா்மசாஸ்தா கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீசபரிவாசன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் வளாகத்தில் ஸ்ரீசபரிவாசன், ஸ்ரீ பாலகணபதி, ஸ்ரீபாலமுருகன் சுவாமிகளுக்கு தனித்தனியாகவும் சந்நிதிகள் அமைந்துள்ளன. இவற்றுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி யாக சாலை பூஜைகள் காஞ்சிபுரம் சா்வதீா்த்தக் குளம் ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் பூஜகா் ஏ.வி.சதீஷ்குமாா் சிவாச்சாரியாா் தலைமையில் வியாழக்கிழமை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை மகா பூா்ணாஹுதி தீபாராதனைக்குப் பின்னா் யாக சாலையிலிருந்து கலசப் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து புனித நீா் சிவாச்சாரியாா்களால் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, மூலவா் ஸ்ரீ சபரிவாசனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், விசேஷ தீபாராதனைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவை சிறுகாவேரிப்பாக்கம் பொதுமக்கள், ஐயப்ப பக்தா்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT