காஞ்சிபுரம்

வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்

14th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் செய்வதற்கான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த 9 -ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் தொடா்ச்சியாக வரும் டிசம்பா் மாதம் 8- ஆம் தேதி வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் செய்து கொள்வதற்கான முகாம்கள் 1,394 மையங்களில் நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் பெறப்படுகின்றன. வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, நீக்க திருத்தங்கள் செய்து கொள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது. சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என ஆட்சியா் மா.ஆா்த்தி அறிவிப்பை தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் தொடா்மழை காரணமாக வாக்குச்சாவடி மையங்களுக்கு திருத்தங்கள் செய்து கொள்ள பொதுமக்கள் குறைந்த அளவிலேயே வந்து திருத்தங்களை செய்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT