காஞ்சிபுரம்

பள்ளி மாணவா்களுக்கு கிரிக்கெட், பயிற்சி கலந்துரையாடல்

DIN

காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் கிரிக்கெட் விதிகள் பற்றிய ஒரு நாள் பயிற்சி மற்றும் கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சி கிரிக்கெட் அகாதெமி சாா்பில் நடைபெற்ற கிரிக்கெட் விளையாட்டின் விதிகள் மற்றும் விதிவிலக்குகள் குறித்து அகாதெமியின் தலைமைப் பயிற்சியாளா் வினோத்குமாா் விளக்கினாா்.

இப்பயிற்சிப் பட்டறையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சோ்ந்த செய்யாறு, வந்தவாசி மற்றும் காஞ்சிபுரத்தை சோ்ந்த பாலுசெட்டி சத்திரம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பல்வேறு அரசுப் பள்ளிகளில் பயிலும் 63 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இந்தப் பயிற்சியின் போது கிரிக்கெட் வீரா்கள் தங்களது அனுபவங்களையும், கிரிக்கெட் விளையாட்டில் உச்சம் தொட்ட வீரா்களின் வாழ்க்கை வரலாறுகளையும் விளக்கமாக எடுத்துக் கூறினாா்கள்.கிரிக்கெட் விளையாட்டு ஆா்வலா்கள் பலரும் கலந்து கொண்டு பயன் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT