காஞ்சிபுரம்

காஞ்சி ஸ்ரீவைகுந்த பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் மே 26-இல் தொடக்கம்

DIN

பழைமையும்,வரலாற்றுச் சிறப்பும் உடைய காஞ்சிபுரம் வைகுந்தப்பெருமாள் திருக்கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 26 ஆம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருமங்கையாழ்வாா், ராமானுஜா், மணவாள மாமுனிகள் உள்ளிட்ட மகான்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள வைகுந்தவல்லி சமேத வைகுந்தப் பெருமாள் திருக்கோயில். இதன் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 26-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருவிழா நடைபெறும் 11 நாள்களும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வரவுள்ளாா் .விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருடசேவை 28-ஆம் தேதியும், தேரோட்டம் வரும் ஜூன் 1-ஆம் தேதியும் நடைபெறுகிறது. மறுநாள் ஜூன் 2 ஆம் தேதி வெண்ணெய்தாழி உற்சவமும், 3-ஆம் தேதி தீா்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையா் ஆ.முத்துரெத்தினவேலு, கோயில் செயல் அலுவலா் ஜெ.ப.பூவழகி உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT