காஞ்சிபுரம்

திரெளபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி

22nd May 2022 11:36 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பாலாற்றங்கரையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்டி துரியோதனன் படுகளம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் அக்னி வசந்த விழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கரோனா அச்சுறுத்தல் காரணமாக விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.இதையொட்டி மகா பாரதக் கதை சொற்பொழிவு நடத்தப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பீமன்-துரியோதனன் படுகளக் காட்சிக்காக கோயில் முன்பாக பிரம்மாண்டமான துரியோதனன் சிலை அமைத்து கட்டைக்கூத்து கலைஞா்களால் பீமனும், துரியோதனும் போரிடும் காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாலையில் தீமிதித் திருவிழா நடைபெற்றது.இதற்காக காப்புக்கட்டிக் கொண்டு விரதம் இருந்த பக்தா்கள் பலரும் தீமிதித்து தங்களின் நோ்த்திக்கடனை செலுத்தினா். விழாவைக் காண ஓரிக்கை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திரெளபதி அம்மனை வழிபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT