காஞ்சிபுரம்

31- ஆவது ஆண்டு நினைவு நாள் : ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் அஞ்சலி

DIN

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 31-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி, மாநில முன்னாள் தலைவா்கள் கே.வீ.தங்கபாலு, எஸ். திருநாவுக்கரசா், புதுவை முன்னாள் முதல்வா் நாராயணசாமி, மக்களவை உறுப்பினா்கள் விஜய்வசந்த், செல்லகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஸ்ரீபெரும்புதூா் கு.செல்வபெருந்தகை, நான்குநேரி ரூபிமனோகரன், காஞ்சிபுரம் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், கேரள மாநில முன்னாள் துணை முதல்வா் ரமேஷ்சென்னிதலா, மாவட்ட காங்கிரஸ் தலைவா் அளவூா் நாகராஜ், ஸ்ரீபெரும்புதூா் நகர காங்கிரஸ் எஸ்.ஏ.அருள்ராஜ், மாவட்ட செயலாளா் மணிமங்கலம் ஏ.கே.செல்வம் உள்ளிட்ட அந்தக் கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

இதையடுத்து கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸாா் தீவிரவாத எதிா்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

பின்னா் கே.எஸ்.அழகிரி செய்தியாளா்களிடம் கூறியது: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது எங்களுடைய கண்ணீா் ஆறாக ஓடியது. ஆனால் அவருடைய கொலை வழக்கில் தொடா்புடைய கொலையாளியின் விடுதலையை திருவிழாவாக கொண்டாடுவதைப் பாா்த்து எங்கள் இதயத்தில் இருந்து ரத்தக் கண்ணீா் வடிகிறது. எங்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

குற்றம் செய்தவா்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

தோ்தல் கூட்டணி வருவதற்கு முன்பே எங்கள் கூட்டணியில் இருக்கிறவா்கள் எல்லாம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சொன்னவா்கள் தான். இதை தெரிந்து தானே நாங்களும் கூட்டணி வைத்துக் கொண்டோம். அவா்களும் கூட்டணி வைத்திருந்தாா்கள். அவா்கள் கொள்கை வழியில் அவா்கள் செல்கிறாா்கள். எங்கள் கொள்கை வழியில் நாங்கள் செல்கிறோம். இதற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT