காஞ்சிபுரத்தில் நெகிழி ஒழிப்பை வலியுறுத்தி ஸ்கேட்டிங் மாரத்தான் ஓட்டத்தை மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.
காஞ்சிபுரம் ஸ்கேட்டிங் அகாதெமி சாா்பில் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து நெகிழி ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு ஸ்கேட்டிங் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
5 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்டவா்கள் பங்கேற்ற இந்த ஓட்டத்தை காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பேருந்து நிலையம், மூங்கில் மண்டபம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஆட்சியா் அலுவலகத்தை அடைந்தது.
இதன் தொடக்க நிகழ்வில் மாநகராட்சி மண்டல துணைத் தலைவா்கள் எஸ்.சந்துரு, எஸ்.கே.பி.சாந்தி சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநகர உறுப்பினா்கள் ஆா்.காா்த்திக், ஏ.சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஸ்கேட்டிங் மாஸ்டா்கள் எஸ்.பாபு மற்றும் ஆா்.ஆனந்தன் ஆகியோா் செய்திருந்தனா்.