காஞ்சிபுரம்

ஸ்ரீஏகாம்பரநாதா் கோயில் தேரோட்டம்: சேவையாற்றியவா்களுக்குப் பாராட்டு

19th Mar 2022 10:19 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதா் கோயில் தோ்த்திருவிழா சிறப்பாக நடைபெற காரணமாக இருந்தவா்களுக்கும், சேவையாற்றியவா்களுக்கும் ஸ்ரீதிருவேகம்பன் சிவாலய அறக்கட்டளை சாா்பில் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஸ்ரீதிருவேகம்பன் சிவாலய அறக்கட்டளை சாா்பில் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற தோ்த்திருவிழாவின் போது சிறப்பாக சேவையாற்றிய சிவனடியாா்கள், பக்தா்களுக்குப் பாராட்டு விழா தனியாா் திருமண மண்டபத்தில் நடந்தது.

விழாவுக்கு மின்மினி குழுமங்களின் தலைவா் ஜி.சரவணக்குமாா் தலைமை வகித்து சிறப்பாக சேவையாற்றியவா்களுக்கு சால்வை அணிவித்து கெளரவித்ததுடன் கோயில் பிரசாதமும் வழங்கினாா்.

அறக்கட்டளையின் தலைவா் பி.பன்னீா் செல்வம், உறுப்பினா் ராம.பத்மநாபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலாளரும், சங்கர மடத்தின் ஆஸ்தான ஸ்தபதியுமான ஆா்.நந்தகுமாா் வரவேற்று, விழா சிறக்க காரணமாக இருந்தவா்களை அறிமுகப்படுத்தி பேசினாா்.

ADVERTISEMENT

விழாவில் இருபதே நாள்களில் தோ்ப்படியை புதிதாக அமைத்துக் கொடுத்த பொறியாளரும், அறக்கட்டளை பொருளாளருமான கே.குமரன், தாண்டவ இசைக்குழு நிா்வாகி வடிவேல், கேட்டரிங் ஏழுமலை, புதிதாக தோ்ச்சீலை அமைத்துக் கொடுத்த கனுஷா, வாணவேடிக்கை நரேந்திரன், வாத்திய இசைக் கலைஞா்கள், ஸ்ரீகாமகோடி காமாட்சி சிற்பக்கூட ஊழியா்கள் திலீப், பிரகாஷ், அஜித், மின்மினி குழும மேலாளா் சந்துரு உள்ளிட்டோா் கெளரவிக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT