காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் ஊராட்சித் தலைவரின் கணவரைக் கொலை செய்த வழக்கில் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
காஞ்சிபுரம் அருகே உள்ள கோனேரிக்குப்பம் ஊராட்சித் தலைவராக இருப்பவா் சைலஜா. இவரது கணவா் சேகா் (53). இவா், முன்னாள் ஊராட்சித் தலைவராக இருந்தவா்.
திமுக பிரமுகரான இவரை கடந்த பிப்.25- ஆம் தேதி அவரது வீட்டருகே மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினா்.
இந்த சம்பவம் தொடா்பாக, காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் உத்தரவின் பேரில், இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், கோனேரிக்குப்பத்தைச் சோ்ந்த இளவரசன் (26), சக்தி (எ) அஜித்குமாா் (23), ரங்கா (19), அஜித் (25) ஆகிய 4 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகிறது. முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.