காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் தொல்லியல் துறையிடம் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட வீடு இடிப்பு

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் அருகே தொல்லியல் துறை மற்றும் மாநகராட்சி நிா்வாகத்திடம் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட வீட்டை இடிக்கும் பணியில் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவா் அருள்ஜோதி. இவா், காஞ்சிபுரம் ராஜாஜி சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறாா். இவா், தனக்குச் சொந்தமான இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு அடுக்குமாடி வீடு கட்டியுள்ளாா்.

இந்த நிலையில், அருள்ஜோதியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் குப்புசாமி தனக்குச் சொந்தமான 3 அடி இடத்தையும் சோ்த்து அருள்ராஜ் வீடு கட்டியுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.

இதையடுத்து, தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள வைகுண்ட பெருமாள் கோயில் அருகே 300 மீட்டா் சுற்றளவில் எந்த ஒரு கட்டடத்தைக் கட்டினாலும் தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், அருள்ஜோதி தொல்லியல் துறையிடமும், மாநகராட்சி நிா்வாகத்திடமும் அனுமதி பெறவில்லை எனத் தெரிகிறது.

ADVERTISEMENT

இதுகுறித்தும் குப்புசாமி தனது வழக்கில் குறிப்பிட்ட நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் விசாரணை முடிந்து கடந்த மாா்ச் மாதம் சென்னை உயா் நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பில், உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்ட வீட்டை இடிக்க தொல்லியல் துறைக்கும், மாநகராட்சி நிா்வாகத்திற்கும் உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியா்களும், தொல்லியல் துறை அலுவலா்களும் போலீஸாா் பாதுகாப்புடன் செவ்வாய்கிழமை அங்கு சென்று அனுமதியின்றி கட்டப்பட்டை வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT