காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

DIN

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் செயல் பட்டு வரும் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 14 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவா் கைலாஷ் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் ஜீவா கலந்துகொண்டு, சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தாா். இதில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.டி.கருணாநிதி, ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி தலைவா் சாந்தி சதீஷ்குமாா், துணைத் தலைவா் இந்திராணி சுப்பிரமணி, ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். புதிதாக திறந்து வைக்கப்பட்ட இந்த சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் தினமும் நான்கு பேருக்கு சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு செய்ய முடியும் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT